ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யா – உமாபதி ராமைய்யாவின் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழ் சினிமாவில் நடிகையாக தென்பட்டு வருகிறார். முதன் முதலில் யானை திரைப்படத்தில் நடித்து 2013 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.
அதை அடுத்து பட்டத்து யானை திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட உமாபதி மீது காதல் வயப்பட்டார் ஐஸ்வர்யா. பெற்றோர்கள் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
அதையடுத்து ஐஸ்வர்யா – உமாபதியின் திருமணம் அண்மையில் படு கோலாகலமாக நடந்துள்ளது. இந்நிலையில் தந்தை அர்ஜுனின் பிறந்த நாளுக்கு மகள் ஐஸ்வர்யா அவருடன் எடுத்துக் கொண்ட அழகான நினைவுகளை வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார். இந்த வீடியோ அம்மா அப்பா மகள் பாசத்தையும் அர்ஜுன் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பையும் வெளிப்படுத்தி அனைவரது வெளிப்படுத்தி உள்ளது இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ
https://www.instagram.com/p/C-sLQfxvTbF/