இன்று லெபனான் ஏவிய அனைத்து ஏவுகணையும் இஸ்ரேல் அயன்-டோம் பாதுகாப்பு கட்டமைப்பால் தகர்கப்பட்டது

இன்று லெபனான் ஏவிய அனைத்து ஏவுகணையும் இஸ்ரேல் அயன்-டோம் பாதுகாப்பு கட்டமைப்பால் தகர்கப்பட்டது

இன்று(05) அதிகாலை லெபனான் ஏவிய அனைத்து ஏவுகணைகளும் இஸ்ரேல் நாட்டின் அயன் டோம், வான் பாதுகாப்பு கட்டமைப்பால் தகர்கப்பட்டுள்ளது. சற்று முன்னர், பிரித்தானியா தமது குடிமக்களுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. லெபனான் நாட்டில் இருந்து உடனே அனைத்து பிரிட்டன் மக்களும் வெளியேறுமாறு கூறியுள்ளதோடு. பிரித்தானியர்களை ஏற்றி வர, தனியான ராணுவ விமானம் ஒன்றை பிரிட்டன் உடனடியாக பெயிரூட்ட்டுக்கு அனுப்பவும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை அமெரிக்காவும் தனது குடிமக்கள் உடனே லெபனானை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான், இஸ்ரேல் உளவுப் படை, ஈரான் நாட்டிற்குள் சென்று , ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவரை கொலைசெய்தது. இது போல ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரையும் லெபனானில் வைத்து போட்டுத் தள்ள முயன்றது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் போர் ஒன்று வெடிக்க பெரும் வாய்ப்புகாள் உள்ளது. ஈரான், லெபனான், துருக்கி போன்ற நாடுகள் ஒன்றாக இணைந்து இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் ஒன்றை நடத்தக் கூடும்.

இஸ்ரேலிடம் உள்ள மிக சக்த்திவாய்ந்த விடையம், அன் நாட்டில் உள்ள அயன் டோம் தான். இதனை இரும்பு வான் பாதுகாப்பு கட்டமைப்பு என்பார்கள். எத்தனை ஏவுகணைகள் வந்தாலும் , இது சமாளித்துவிடும். இதனால் இம் முறை வேறு ஏதாவது பொறிமுறையில் , ஈரான் , லெபனான் இஸ்ரேலை தாக்கக் கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது.