இந்திய கிரிக்கெட் வீரர் ஆன ஹர்திக் பாண்டியா பிரபல பாலிவுட் நடிகையான நடாஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக கோலாகலமாக கடந்த 2020ல் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு தற்போது நான்கு வயதாகிறது.
ஹர்திக் பாண்டியா சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய போட்டியாளராக அவர் பார்க்கப்பட்டார். இதனால் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். இப்படியான சமயத்தில் ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவியும் நட்டாஷாவும் சமீப நாட்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது அதனை அவர்கள் இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதாவது நானும் நட்டாஷாவும் இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்து வாழ்க வாழப் போகிறோம் இதுதான் எங்களது சரியான முடிவு. இந்த முடிவில் எங்களுடைய மகன் எந்த விதத்திலும் பாதிக்கப்படாதவாறு இருவரிடமும் வளருவான். நாங்கள் அவருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்வோம் என ஹர்திக் பாண்டியா மற்றும் நட்டாஷா இருவரும் கூறி இருக்கிறார்கள். இந்த தகவல்கள் இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.