என் குழந்தை விஜய் டிவியில் தான் வளருது – அதிர வைத்த VJ பிரியங்கா!

என் குழந்தை விஜய் டிவியில் தான் வளருது – அதிர வைத்த VJ பிரியங்கா!

பிரபல தொகுப்பாளினியாக VJ பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், பிக் பாஸ் என் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுகிறார் தனது நெருங்கிய நண்பரான மா கா பா ஆனந்தின் உதவியுடன் விஜய் டிவியில் வந்து இன்று மக்களால் தவிர்க்க முடியாத விஜேவாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் தனது நீண்ட நாள் நண்பரான பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு பின்னர் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதன் பின்னர் தனது தொழிலில் பிசியாக இருந்து வந்த பிரியங்கா இன்று பிரபலமான ஆங்கராக வளர்ந்து நிற்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், ஜய் டிவியில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியா? எனக்கேட்டதற்கு, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் எனக்கு நல்ல அடையாளம் கொடுத்து இந்த அளவுக்கு வளர்த்து விட்டுள்ளது. அதே போல்… “ஸ்டார் மியூசிக்” என்னுடைய குழந்தை, அது நல்லபடியா வளர்த்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது என் ஆசை. அதன் தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று சிரித்தபடி பகிர்ந்துள்ளார்.