ஜோடி SUPER… ரொமான்ஸில் மூழ்கிய அஜித் – திரிஷா….” விடாமுயற்சி” போஸ்டர்!

ஜோடி SUPER… ரொமான்ஸில் மூழ்கிய அஜித் – திரிஷா….” விடாமுயற்சி” போஸ்டர்!

அட்லடிமேட் ஸ்டார் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆரவ் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தரித்து வரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது.

இப்படம் ஆரம்பித்தது முதலே பல்வேறு பிரச்னைகளில் சிக்கி மீண்டு வந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அஜித் மற்றும் திரிஷாவின் ரொமான்டிக் லுக்கில் இருக்கிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு இந்த ஜோடியை ரசிகர்கள் திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.