ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்புரி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை 90ஸ் காலகட்டத்தில் பெற்றிருந்தார் .
இவரது நடனத்தை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். இவரது தொடையழகுக்கும் அவரது கவர்ச்சி அழகை ரசிக்கவும் திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தார்கள். குறுகிய காலத்திலேயே ஃபேமஸான நடிகையாக பார்க்கப்பட்ட ரம்பாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தார்கள்.
நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து ஓடிக்கொண்டிருந்தார். ரம்பா வாழ்க்கை திடீரென சறுக்கலை சந்தித்து ஆள் அட்ரஸ் இல்லாத அளவுக்கு சினிமா பக்கமே தலைகாட்ட முடியாத அளவுக்கு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டார். அதன் பின்னர் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர் சமீப நாட்களாக சமூகவலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் ரம்பாவின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரம்பா வெளியிட்டு, ” பல வருடங்களுக்குப் பிறகு உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்”எனகூப்ரி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.