நட்சத்திர நடிகையான நடிகையான தமன்னா தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக 2006 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து வியாபாரி கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, கோ வேங்கை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் நடிகை தமன்னா.
இதனிடையே பாலிவுட்டில் அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்க அங்கு சென்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டே வெப் சீரிசலும் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக அவரின் நடிப்பில் வெளிவந்த ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட வெப் தொடரில் நடித்த தம்மன்னா அதன் மூலம் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கிக்கொண்டார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விராட் கோலியுடன் சென்றதாக வெளிவந்த செய்தி குறித்து பேசியுள்ளார். அதாவது,” நான் விராட் கோலியுடன் விளம்பரத்தில் நடித்த போது 4 வார்த்தைகள் மட்டுமே பேசினோம். அவ்வளவு தான். அதற்கு பிறகு நான் விராட்டை சந்திக்கவோ பேசவோ இல்லை. ஆனால், நான் பணிபுரியும் பெரும்பாலான நடிகர்களை விட அவர் சிறந்த மனிதர் என்று நான் சொல்ல வேண்டும்.” என்று என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமன்னா.