அம்பானி வீட்டு கல்யாணத்தில் “தமன்னா” அணிந்துவந்த உடை இத்தனை லட்சமா!

அம்பானி வீட்டு கல்யாணத்தில் “தமன்னா” அணிந்துவந்த உடை இத்தனை லட்சமா!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வரும் தமன்னா தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக 2006 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து வியாபாரி கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, கோ வேங்கை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் நடிகை தமன்னா.

தென்னிந்திய சினிமாவை தாண்டி அவர் இந்தியில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்க அங்கு சென்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டே வெப் சீரிசலும் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக அவரின் நடிப்பில் வெளிவந்த ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட வெப் தொடரில் நடித்த தம்மன்னா அதன் மூலம் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கிக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகை தமன்னா அம்பானி வீட்டு கல்யாணத்தில் கறுப்பு மற்றும் தங்க நிற உடையை அணிந்து வந்தார். அந்த ஆடையின் விலை 3.85 லட்சம் என கூறப்படுகிறது. அந்த திருமண நிகழ்ச்சியில் தமன்னாவுடன் அவரது காதலர் விஜய் வர்மாவும் கலந்துக்கொண்டது குறிப்பிடதக்கது.