கொழுக் மொழுக் நடிகையான ஷாலினி பாண்டே விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் .
இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகக்குறுகிய காலத்திலே பிரபலமான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார். குறிப்பாக தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 100% காதல் திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானார். இதனிடையே உடல் எடை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ள அவர், “நான் அர்ஜூன் ரெட்டி படத்தில் நடிக்கும் போது குண்டாக இருந்ததை பலர் பாடிஷேமிங் செய்தார்கள். அதன் பின் நான் உடல் எடை குறைத்து பிட்டாக மாறிய பிறகு ஒல்லியாக இருப்பதாக கேலி செய்தார்கள்.
மேலும் “எனக்கு தென்னிந்திய மொழிகள் தெரியவில்லை என்பதால், ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். அப்போது என் மானேஜர்கள் என்னுடைய அப்பாவித்தனத்தை தவறாகப் பயன்படுத்தி சில திரைப்படங்களில் நடிக்கச் சொல்லி ஏமாற்றினர். அந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்தது என்னுடைய குடும்பம் தான்” என்று ஷாலினி பாண்டே கூறியுள்ளார்.