தமன்னாவுடன் உறவு… வெளிப்படையாக பேசிய விஜய் வர்மா!

தமன்னாவுடன் உறவு… வெளிப்படையாக பேசிய விஜய் வர்மா!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான தமன்னா தற்போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாக்களில் அடுத்தடுத்த பல வெற்றி திரைப்படங்களில் நடித்த ரவுண்டுகட்டி வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக இவருக்கு பாலிவுட் சினிமாவில் தற்போது யோகம் அடித்திருக்கிறது என்றே கூறலாம். ஆம் அங்கு தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்கலில் நடிப்பதோடு அடுத்தடுத்து வெப் சீரிஸ்களில் நடித்து தமன்னா முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

குறிப்பாக லஸ்ட் ஸ்டோரீஸ், ஜீ கர்தா உள்ளிட்ட தொடர்களின் மூலமாக அவர் மிகப்பெரிய அளவில் மார்க்கெட் பிடித்து விட்டார். பாலிவுட் சினிமாவில் நடிப்பதோடு தென்னிந்திய சினிமாவில் ஜெயிலர் மற்றும் அரண்மனை 4 உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடித்து வந்தார். இதனிடையேவ் பாலிவுட் இளம் ஹீரோவான விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் வர்மா தமன்னா உடனான உறவு குறித்து பேசி பேட்டி ஒன்றி பேசியுள்ளார். அதாவது, எனக்கும் தமன்னாவுக்கும் இடையே ஆழமான, அன்பான பந்தம்தான் இருக்கிறது. எங்களிடம் எல்லோரும் திருமணத்தை பற்றியே கேட்கிறார்கள்.

எப்போது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்துக்கொள்வோம். திருமணம் என்பது பார்ட்டி இல்லை, அது மிக பெரிய பொறுப்பு. மற்றவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதால் ன்பதாலோ மணமுடிக்க கூடாது என்று விஜய் வர்மா தெரிவித்துள்ளார்.