தமிழ் தேசிய கூட்டணியின் முன் நாள் தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவருமான இரா. சம்பந்தன் சுமார் 6 மணி நேரத்திற்கு முன்னதாக இறந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சிங்கள இனவாதிகளான சரத் பொன்சேகா தொடக்கம், மகிந்த மற்றும் அனைத்து சிங்கள அரசியல் வாதிகளும் இதற்கு கவலை தெரிவித்துள்ளார்கள். ஆனால் தமிழர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவே இல்லை. இதில் இருந்து என்ன புரிகிறது ?
இனியாவது தமிழர் அரசியல் ஒரு நல்ல பாதையில் செல்லாதா ? என்ற ஏக்கம் இலங்கைத் தமிழர்களிடம் மட்டும் அல்ல, புலம்பெயர் தமிழர்களிடமும் இருக்கிறது என்பது தான். எனவே இனி சரியான தலை ஒன்றை தெரிவு செய்து, இவர்கள் போன்ற புல்லுருவிகளை தவிர்த்து அரசியலைக் கொண்டு சென்று, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.