மாடல் அழகியாக இருந்து வந்த நடிகை நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்து வளர்ந்து துபாயில் சென்று செட்டில் ஆனார். அதன் பிறகு இவர் மாடலிங் மற்றும் கார் ரேசிங் உள்ளிட்டவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்து வந்தார்.
இதனிடையே திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அந்த திரைப்படத்தில் அவரின் மிகச் சிறந்த நடிப்பு ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து
தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், டிக் டிக் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் இவர் நடித்து புகழ்பெற்றார் . இந்நிலையில் தற்போது கருப்பு உடையில் கலக்கலான போஸ் கொடுத்து மாடர்ன் லுக்கில் மயக்கியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.