அடுத்த வாரம் ஆட்டிப் படைக்கப் போகும் Hay Fever எப்படித் தடுப்பது ? 10 வழிகள் இதோ !

அடுத்த வாரம் ஆட்டிப் படைக்கப் போகும் Hay Fever எப்படித் தடுப்பது ? 10 வழிகள் இதோ !

பிரித்தானியா மட்டும் அல்ல முழு ஐரோப்பாவிலும் அடுத்த வாரம் தொடக்கம் சில நாட்களுக்கு கடும் வெப்ப கால நிலை உருவாக உள்ளது. இதனால் மரங்கள் தொடக்கம் செடி கொடிகள் , அதிகம் பூக்கும் என்று, பிரித்தானியா(MET OFFICE) கடும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுவாக நம்மில் பலருக்கு ஹே பீபர்(hay fever) என்னும், மகரந்த அலேர்ஜி உள்ளது. வீட்டை விட்டு வெளியே சென்றால் போதும், உடனே கண் கடித்தல், மூச்சு திணறல், சடுதியாக சளி பிடித்து மூக்கால் வடிவது, சிலருக்கு தோல் தடிப்பது போன்ற உபாதைகள் தோன்றும். பொதுவாக மே May தொடக்கம் July மாத இறுதிவரை தான் இந்த மகரந்த பொடிகள் காற்றில் இருக்கும். ஜூலை மாத இறுதியோடு அவை மறைந்து போகும். ஆனால் இந்த 3 மாதமும் நாய் படாப் பாடு,  படவேண்டி இருக்கும். காரைக் கூட ஒழுங்காக ஓட்ட முடியாது , வெளியே செல்ல முடியாது, உடனே தும்மல் வரும். தற்போது பிரித்தானியாவில் 10 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் 10 நபர்களை எடுத்துக் கொண்டால், ஒரு நபருக்கு இந்த மகரந்த அலேர்ஜி உள்ளது.

மகரந்த அலேர்ஜி என்றால் என்ன ?
மே மாதம் முதல் ஜூலை இறுதி வரை, பூக்கும் பூக்களில் இருந்து வெளியாகும் மகரந்தம் தான் இதற்கு காரணம். ஊரில்(இலங்கை இந்தியாவில்) எனக்கு இந்த வியாதி இல்லையே ? ஏன் இங்கே வருகிறது என்று கேட்டால். ஆசிய நாடுகளில் 10 மாதங்கள் கோடை காலம் தான். அதனால் பூக்கள் இயல்பாக பூக்கிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில், செடிகள் கொடிகள் மற்றும் மரங்கள் என்பன குளிர்காலத்தில் உறை நிலைக்குச் சென்று, பட்டுப் போன மரம் போல ஆகி விடும். இவை மீண்டும் துளிர் விடும் சமயத்தில், உடனடியாக இனப்பெருக்கம் செய்ய வேண்டி இருக்கும். அதனால் இயற்கையே இப்படி ஒன்றை உருவாக்கி வைத்துள்ளது. அது தான் அதி-சக்த்தி வாய்ந்த மகரந்தம்.

இவை காற்றில் 50% சத விகிதத்திற்கு மேலே இருந்தால் சில மனிதர்களால் தாங்க முடியாது. அவை சுவாசப் பைகளுக்குள் செல்ல முற்படும் வேளை, உடல் அதனை எதிர்க்க ஆரம்பிப்பதால், Hay Fever என்ற மகரந்த அலேர்ஜி உருவாகிறது.

இதனை தடுப்பது எப்படி ?
தடுப்பது என்பது 2 வகைப் படுகிறது. ஒன்று முற்றாகத் தடுத்து மீண்டும் வராத மாதிரி பார்த்துக் கொள்வது. மற்றையது தற்காலிகமாக தடுப்பது. முதலில் நாம் நிலந்தரமாக தடுப்பது எப்படி என்று பார்கலாம். பொதுவாக மரங்களில் இருந்து வரும் மகரந்தம், அந்த அளவு வீரியம் இல்லை. ஆனால் புல், செடி கொடிகள் மற்றும் வீட்(Weed)  என்று அழைக்கப்படும் ஒட்டுண்ணி தாவரங்களில் இருந்து பூக்கும் பூக்களின் மகரந்தம் தான் மிகவும் வீரியம் மிக்கது. இதனால் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் எங்கே யாவது தேன் கூடு இருந்தால், அந்த தேனை உண்டு வரலாம், இல்லையென்றால் அருகில் உள்ள, ஏதாவது ஒரு பண்ணையில் உள்ளூர்(அந்த ஏரியா) தேன் கிடைத்தால் அதனை உண்டு வந்தால், உடலில் எதிர்ப்பு சக்த்தி அதிகரிக்கும். மேலும் இது வயதான நபர்களை தான் அதிகம் தாக்கும். குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்ட நபர்களை.

இதனால் நீங்கள் அடிக்கடி காடியோ(cardio exercises) என்று சொல்லப் படும் இதயம் மற்றும் மூச்சை அதிகம் பாவிக்கும் பயிற்ச்சிகளில் ஈடுபட வேண்டும். பொதுவாக நீச்சல், ஓடுதல், போன்ற உடல் பயிற்ச்சியில் ஈடுபட்டால், எதிர்ப்பு சக்த்தி அதிகரிக்கும். ஆனால் இதனை ஜூன் மாதம் செய்து விட்டு எனக்கு குணமாக வில்லை என்று நினைக்க வேண்டாம். இப்படியான உடல் பயிற்ச்சிகளை செய்து வந்தால், 6 மாதம் அல்லது 9 மாதத்திற்கு பின்னரே பலன் கிடைக்கத் தொடங்கும். மேலும் மூக்கிற்கு உள்ளே இருக்கும் முடியை எந்தக் காரணம் கொண்டும் வெட்ட வேண்டாம். இவை குறைந்த பட்சம் 35% சத விகிதம் மகரந்தம் உள்ளே செல்வதை தடுக்கிறது.

தற்காலிக நிவாரணம்
மகரந்த அலேர்ஜியில் இருந்து உடனடியாக விடு பட, பல மாத்திரைகள் கடைகளில் கிடைக்கும். ஆனால் எல்லா மாத்திரைகளும் எல்லாருக்கும் வேலை செய்யாது.  இது பலருக்குத் தெரியாது. சில மாத்திரைகள் £5 பவுண்டுகள். உள்ளே 7 மாத்திரை தான் இருக்கும். ஆனால் அதனை போட்டால், நிவாரணம் இருக்காது. இதேவேளை டெஸ்கோவில்(Tesco) உள்ள விலை குறைந்த (£3)பவுண்டு மாத்திரையை போட்டால் இந்த அலேர்ஜி உடனே நின்றுவிடும். இதனால் பல மாத்திரைகளை பாவித்துப் பார்த்து, எதனை எடுத்தால் உடனே வேலை செய்கிறது என்று பாருங்கள். அந்த மாத்திரைகளைப் பாவியுங்கள். மேலும் வெளியெ செல்ல முன்னர் சுமார் 30 நிமிடத்திற்கு முன்னதாகவே மாத்திரைகளை எடுக்க வேண்டும். எம்மில் பலர் வெளியே செல்வது, அலேர்ஜி ஆரம்பித்த உடனே பின்னர் ஓடி வந்து மாத்திரையை எடுக்கிறார்கள். அப்படி என்றால் அது சரியாக வேலை செய்யாது. மேலும் மாத்திரை எடுக்கும் போது குறைந்த பட்சம் 2 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். (ஏன் என்று கேட்காதீர்கள், பின்னர் அதற்கும் நான் பந்தி பந்தியாக விளக்கம் தர வேண்டி இருக்கும்)

இரவில் வீட்டின் ஜன்னலை பூட்டி வைத்திருப்பது, வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவது, வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினால் உடனே தலை குளித்தல், அதிக நேரம் வெளியில் இருப்பதை தவிர்ப்பது, வீட்டில் பூ ஜாடி இருந்தால் அதனை தற்காலிகமாக வெளியே வைப்பது, உங்கள் காரில் Pollen filter(அதாவது மகரந்தத்தை வடி கட்டும்) சிஸ்டம் ஒன்று இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. 2010ம் ஆண்டுக்குப் பின்னர் வந்த கார்களில் பொதுவாக இது உள்ளது. இதனை அடிக்கடி மாற்ற வேண்டும். மேலும் வீட்டில் ஏர் பில்ட்டர்(AIR-FILTER) ஒன்றைக் கூட வாங்கி நீங்கள் போட்டு விடலாம். £15 பவுண்டுகளில் இருந்து இவை கிடைக்கிறது(அமேசனில்). இதனூடாக நீங்கள் இந்த மகரந்த அலேர்ஜியை தற்காலிகமாக குறைக்க முடியும்.

மகரந்தப் பொடிகள் மூக்கிற்கு உள்ளே செல்வதால் தான் கண் கடிக்கிறது என்று நம்மில் பலர் நினைக்கிறார்கள். அது தவறு. கண்களில் மகரந்தப் பொடிகள் விழுவதால் தான் கண் கடிக்கிறது. இதனால் வெளியே செல்லும் போது சன் கிளாஸ் அணிவது நல்லது.  இந்தச் செய்தி பிடித்திருந்தால், உங்கள் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இதனைப் பகிரவும்.