பிரபல நடிகையான காஜல் அகர்வால் முதன் முதலில் இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார். தமிழில் அஜித் விஜய் தனுஷ் என பல நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையானார்.
இதனிடையே கௌதம் கிச்சுலு என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார் .திருமணம் குழந்தை பிறப்புக்குப் பிறகும் காஜல் அகர்வால் கவர்ச்சியில் குறைவில்லாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது மகன் , கணவர் மற்றும் தோழிகளுடன் அவுட்டிங் சென்று எடுத்துக்கொண்ட ஜாலியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதில் அவரின் மகனின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ்… அதுக்குள்ள இம்புட்டு வளர்ந்திட்டாரா என வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.