போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு நடுவே உள்ள நாடு தான் சுலோவாக்கியா. அந்த நாட்டின் அதிபர் றொபேட் பேசியோ, நேற்று முன் தினம்(14) மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து துப்பாக்கிதாரியால் 5 தடவை சுடப்பட்டுள்ளார். பலத்த காயங்களுக்கு ஆளான றொபேட் பேசியோவை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டார்கள். இது ரஷ்ய அதிபர் புட்டினுக்கு விழுந்துள்ள பலத்த அடி ஆகும். போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு நடுவே சுலோவாக்கியா இருக்கிறது.
மேலும் சொல்லப் போனால், நேட்டோ நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த ஒரு நாடு தான் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இப்படியான ஒரு மையப் புள்ளியில் இருக்கும் சுலோவாக்கியா நாடு, ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்து வருவது, நேட்டோ நாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தான ஒரு விடையம். அரசியல் எதிரிகளால் தான் சுலோவாக்கிய அதிபர் சுடப்பட்டார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும்…
இதன் பின்னணியில் அமெரிக்க உளவு நிறுவனம் இருக்க பெரும் வாய்ப்புகள் உள்ளது. மக்கள் சந்திப்பில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள் இனி மிகக் கவனமாக இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கை தற்போது ஐரோப்பா எங்கும் ஒலித்துள்ளது.
Source : assassination attempt on pro-Putin Slovakian PM