சற்று முன்னர் லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று, அனைவரையும் புரட்டிப் போட்டுள்ளதோடு. பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சு அவசரமாக கூடி விவாதிக்கும் அளவு நிலமை சென்றுள்ளது. பிரித்தானியாவின் பிராட்ஃபேட் நகரில், உள்ள ஒரு வீட்டை Counter-terror police சுற்றி வளைத்துள்ளார்கள்.
குறித்த வீட்டின் பின்னால் கார்டனில் இருந்த ஷெட் ஒன்றில், ரேடியோ அக்டீவ் என்று அழைக்கப்படும் கதிரியக்க பொருட்கள். சிறிய ரக அணு குண்டு ஒன்றை தயாரிக்க ஏதுவான வெடி பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வீட்டில் இருந்த பலர் கைதாகியுள்ளதோடு. அவர்களோடு தொடர்பில் இருந்த மேலும் பலர் கைதாகியுள்ளார்கள்.
சில மாதங்களாக பிரித்தானிய உளவுத் துறை, இது தொடர்பாக பல உரையாடல்களை ஒட்டுக் கேட்டு வந்த நிலையில். சரியான சந்தர்பத்தில் திடீரென வீடு புகுந்து இவர்களை சரியான நேரத்தில் கைதுசெய்துள்ளார்கள் என்று மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கைதான நபர்கள் முஸ்லீம்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதனை சரியாக உறுதிசெய்ய முடியவில்லை. கைதான நபர்களை முகமூடியால் போர்த்தியே பொலிசார் கொண்டு சென்றுள்ளார்கள்.