சமீபகாலமாக இளையராஜாவை பற்றி தொடர்ந்து பல நட்சத்திர பிரபலங்கள் புகார்களை அடுக்கடுக்காக கூறி வருகிறார்கள். குறிப்பாக அவர் சக கலைஞர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை, தலைக்கணத்தில் ஆடுகிறார், தான் தான் மிதப்பில் இருக்கிறார் என பலர் பிரபலங்கள் இளையராஜாவுடனான மோசமான அனுபவத்தை பற்றி வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் தான் கூலி இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியாகியிருந்தது. அதில் இளையராஜாவின் இசையை பயன்படுத்தியிருந்தார்கள். இதற்காக என்னுடைய இசையை பயன்படுத்த வேண்டும் என்றால் ராயல்டி பெற்று தான் இசையை பயன்படுத்த வேண்டும் என்று இளையராஜா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பூதாகரமாக வெடிக்கத் துவங்கியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசி உள்ள செய்யார் பாலு ரோஜா படத்திற்காக ஓகே பாலச்சந்தர் மணிரத்தினம் அவரை இளையராஜாவிடம் சென்று சந்தித்து இசையமைக்க கேட்க சொல்லி அனுப்பி வைத்தாராம்.
அந்த சமயத்தில் மணிரத்தினம் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவை பார்க்க நேராக உள்ளே சென்று இருக்கிறார். அப்போது இளையராஜா அவரை தடுத்து நிறுத்தி உன்னை யார் நேராக உள்ளே உள்ளே வரச் சொன்னது? வெளியே போய் மரத்தடியில் நில்லு என்று அசிங்கப்படுத்தி இருக்கிறார். அப்போது மணிக்கணக்கில் மரத்தடியில் நின்றும் இளையராஜா கண்டுக்கவே இல்லையாம்.
இதை யாரோ பாலச்சந்திரிடம் கூற நான் அனுப்பி வைத்த நபரை நீ இந்த அளவுக்கு அசிங்கப்படுத்தினாயா? என்ற ஒரு கோபத்தில் புது நபராக ஏ.ஆர் ரஹ்மானை ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்க்க செய்தது. இது இளையராஜாவின் முகத்தில் கரி பூசியது போல் அமைந்து விட்டதாக அப்போதே பேசினார்கள் என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.