தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான நடிகர் சூர்யா தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவார் திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா சூர்யா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் பெருமையாக பேசியது என்னவென்று கேட்டால், சூர்யா சினிமாவிலும் குடும்பத்திலும் 200% சிறப்பான நபராக செயல்படக்கூடியவர்.
பிடிக்காத விஷயம் எது என்று கேட்டீர்கள் ஆனால், “கங்குவா” திரைப்படத்திற்காக சூர்யா பல நாட்களாக அதே ஹேர் ஸ்டைலுடன் இருக்கிறார். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே கூடிய விரைவில் அந்த ஹேர் கட் பண்ணி விட வேண்டும் என ஜோதிகா தெரிவித்திருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.