படத்தில் உள்ள இந்தச் சிறுவன், இஸ்ரேல் படைகள் வருவதைப் பார்த்து பயந்து ஓடிச் சென்று ஒளிந்துகொள்ள முற்பட்டுள்ளான். ஆனால் அவன் தலையைக் குறிவைத்து இஸ்ரேல் படைகள் அவனைச் சுட்டுக் கொன்றுள்ளார்கள். வெஸ்ட் பேங்கில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த 8 வயதுச் சிறுவனின் பெயர், அடமி அல் குவால் ஆகும். இவனோடு சேர்த்து மேலும் ஒரு 15 வயதுச் சிறுவனையும் இஸ்ரேல் படையினர் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.
இதனை தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் சுமார் 45 தொடக்கம் 50 அடி தூரத்தில் இருந்தே இஸ்ரேலியப் படைகள் சுட்டுள்ளார்கள் என்பது மிகவும் அதிர்ச்சியான விடையம். அப்படி என்றால் அவர்களால், இந்தச் சிறுவர்களை நிச்சயம் தெளிவாகப் பார்த்து இருக்க முடியும். சிறுவர்கள் என்று கூடப் பாரமல், அவர்கள் பாலஸ்தீனர்கள் என்ற பார்வையில் அவர்கள் மண்டையில் சுட்டுக் கொன்றுள்ளார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை இந்த விடையத்தை கடுமையாக கண்டித்துள்ளதோடு, இது ஒரு போர் குற்றச் செயல் என்றும் முதல் முறையாக கூறியுள்ளது. இதனை இஸ்ரேல் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை. சமீபத்தில் தான் உணவு வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 3 போரைக் கொலைசெய்தது.