தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி மாபெரும்ஹிட் அடித்த திரைப்படம் குண்டூர் காரம் இப்படத்தில் குறிப்பாக “குறிச்சி மடதப்பட்டி ” பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியது. இந்தப் பாடலுக்கு பிரபல கவர்ச்சி நடிகை ஆன ஸ்ரீலிலா போட்ட நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இதில் அவரது நடனம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்கச் செய்தது. இதனால் மற்ற இயக்குனர்களும் தங்களது படங்களில் ஸ்ரீ லீலா நடனம் ஆடினால் அந்த படத்திற்கு மிகப்பெரிய மவுஸ் கிடைக்கும் என நினைத்து அவரை அடுத்தடுத்து ஐட்டம் பாடல்களில் புக் செய்ய கேட்டு அணுகி வருகிறார்கள்.
அப்படித்தான் விஜய்யின் கோட் திரைப்படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபு அவரிடம் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட முடியுமா? என கேட்டிருக்கிறார் அதற்கு எடுத்த எடுப்பிலேயே நோ சொல்லிவிட்டாராம் ஸ்ரீ லீலா. விஜய் படத்திற்கு நோ சொல்லிவிட்ட ஸ்ரீ லீலா அஜித் படத்தில் நடிக்க மட்டும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுதான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது பற்றி அவரிடம் கேட்டால் அஜித் படத்தில் நான் ஒன்றும் ஐட்டம் பாட்டுக்கு டான்ஸ் ஆடல அவருக்கு தங்கை கேரக்டரில் தான் நடிக்கிறேன். நான் முதன் முதலில் நடிக்கும் படம் ஹீரோயினாக இருந்தால் தான் எனக்கு பெருமையாக இருக்கும். அறிமுகப்படமே ஐட்டம் பாடல் என்றால் என்னால் நடிக்க முடியாது என கறாராக கூறிவிட்டாராம் ஸ்ரீலிலா. டாப் நடிகரான விஜய் படத்தையே நிராகரித்துவிட்டாரே இந்தம்மா என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.