ரஷ்யாவின் அதி நவீன மற்றும் விலை உயர்ந்த($228M) அணு குண்டை வீசும் விமானத்தை, உக்ரைன் ஏவுகணைகள் பதம்பார்த்துள்ளது. உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் செயல் இழந்த ரஷ்ய விமானம் நிலத்தில் வந்து விழும் காட்சிடை வீடியோ எடுத்துள்ளது உக்ரைன் ராணுவம். TU22M3 ரக விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதன் விலை மட்டும் 228 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
யுத்தம் ஆரம்பித்து பல அழிவுகளை ரஷ்யா சந்தித்து வரும் நிலையில், இதுவே அதி உச்சக் கட்ட அழிவு என்று கூறப்படுகிறது. ரஷ்யாவின் TU22 ரக விமானங்கள் அணு குண்டை தாங்கிச் சென்று ஏவக்கூடியவை. தற்போது வெடித்து நொருங்கிய விமானத்தில் அணு குண்டுகள் இருந்ததா ? என்று தெரியவில்லை. இருப்பினும் இதனை உக்ரைன் ராணுவம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்ய TU 22 விமானம் விழுந்து நொருங்கியது தொடர்பாக இதுவரை ரஷ்யா வாயே திறக்கவில்லை. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் கொடுத்த அதி நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளையே உக்ரைன் தற்போது பாவித்து வருகிறது. ஒரு வகையில் ரஷ்ய விமானங்களை தமது ஏவுகணைகள் எப்படித் தாக்குகிறது என்பதனை, ரஷ்யாவுடன் போர் புரியாமலே அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள், நாடிபிடித்து பார்த்து வருகிறது.