சற்று முன்னர் பாரிஸ் நகரில் உள்ள ஈரான் தூதுவராலயத்தினுள், பிரான்ஸ் அதிரடிப்படைப் பிரிவு செல்ல தயாராகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டு தூதுவராலயத்திற்கு முன்னால், வெடி குண்டு ஜாக்கெட்டுடன் ஒருவர் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதேவேளை, தூதுவராலய அதிகாரிகள் தமது கட்டடத்தினுள் யாரோ இருப்பதாகவும் சந்தேகம் கொண்டார்கள். இன் நிலையில் வளாகத்தினுள் பொலிசார் செல்ல தயாராகி இருந்தார்கள்.
பெரும் தொகையில் ஆயுதம் தாங்கிய பொலிசார் அங்கே குவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஈரான் நாட்டு தூதுவராலய காவலாளிகள் வளாகத்தை முற்றாக சோதனை செய்து அங்கே யாரும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்கள். என்ன தான் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில், ஈரான் நாட்டு தூதுவராலயம் இருந்தாலும். அந்த இடம் ஈரான் நாட்டின் சொந்த இடமாகவே கருதப்படும். இதன் காரணத்தால், பிரான்ஸ் பொலிசாரோ அல்லது எந்த ஒரு அதிகாரியோ, அன் நாட்டு அனுமதி இன்றி உள்ளே நுளைய முடியாது.
இதன் காரணத்தால் தான் பொலிசார் வெளியே நின்றிருந்தார்கள். தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த நபரை பொலிசார் கைதுசெய்துள்ளதாக அறியப்படுகிறது.
Source: https://www.dailymail.co.uk/news/article-13327841/Man-threatens-blow-outside-Iranian-embassy-Paris.html