சினேகா ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் டானியல் பாலாஜி. இவர் திரைத்துறையில் பல்வேறு படங்களில் வில்லன் ரோல்களில் ஏற்று நடத்து தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை பதித்து விட்டார். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த காக்க காக்க திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் வெற்றியும் குவித்தது.
தொடர்ந்து அதுபோன்ற வாய்ப்புகள் தேடி வர வில்லனாக ஒவ்வொரு படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி எடுத்தார். இந்நிலையில் இன்று டேனியல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்துவிட்டார்.
டேனியல் பாலாஜியின் இறப்பு அவரது அம்மாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டேனியல் பாலாஜி தனது அம்மாவுக்காக ஆவடியில் கோயில் கட்டி இருக்கிறார். கடைசி வரை அவர் திருமணமே செய்யாமல் அம்மாவை மட்டுமே பார்த்து கடவுள் போல கவனித்து வந்தாராம். இந்த நிலையில் மகன் உயிரிழந்து கிடப்பதை பார்த்து பார்த்து ” எனக்கு முன்னாடி போயிட்டியே என் தங்கமே”…அம்மாவை தவிக்க விட்டுட்டு போயிட்டியே என் ராசா கதறி அழுது புலம்பியுள்ளார். அம்மாவின் அழுகை ஒட்டுமொத்த திரையுலகினரையும் கதிகலங்க செய்துள்ளது.