“காக்க காக்க” படத்தின் போது… அத மறக்கவே முடியல – சூர்யா ஆழ்ந்த இறங்கல்!

சூர்யா

பிரபல வில்லன் நடிகரான டானியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகச்சிறந்த வில்லன் நடிகரை இழந்துவிட்ட வாடும் திரையுலகினர் அவருக்கு பலரும் இரங்கல் கூறி வருகிறார்கள். அவரின் குடும்பத்தாருக்கும் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா டேனியல் பாலாஜியுடன் காக்க காக்க திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை குறித்தும் அவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தனது twitter பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், “நான் அவருடன் இணைந்து காக்க காக்க படத்தில் நடித்த அனுபவத்தை மறக்கவே முடியாது. அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தன்னுடைய இதயபூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

டேனியல் பாலாஜியின் மறைவு அதிர்ச்சியும் வருத்தத்தையும் அளித்துள்ளது. ஒரு ஷார்ட் சிறப்பாக வருவதற்காக என்னை எப்போதும் அவர் வற்புறுத்தி வந்ததாக சூர்யா குறிப்பிட்டுள்ளார். மறைந்த டானியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் இருந்த அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முன்னதாக அவர் கண்தானம் செய்த நிலையில் அவர்களது கண்களும் தானமாக கொடுக்கப்பட்டது. டேனியல் பாலாஜி தன்னுடைய கண்கள் மூலம் இந்த உலகத்திற்கு வாழ்வார்!