திரையுலகை பொருத்தவரை எத்தனையோ முன்னணி நடிகர்கள் இருந்தாலும் அவர்களில் யார் பெஸ்ட் என்பதை முக்கால்வாசி அவர்கள் நடிப்பில் வெளிவரும் படங்களின் வசூலை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் அதிகமான வசூலை பெற்று இந்திய சினிமாவிலேயே கிங் கான் என்று ஒரே ஒரு நடிகர் நிரூபித்திருக்கிறார்.
மேலும் அவர் நடிப்பில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட மூன்று படங்கள் வெளியாயிருக்கிறது. மூன்று படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அதிக வரவேற்பை பெற்று விட்டது. அதுமட்டுமில்லாமல் ஒரே ஆண்டில் 2500 கோடி வருமானத்தை பார்த்து வசூல் நாயகன் என்கிற பட்டத்தையும் பெற்றுவிட்டார். உண்மையிலேயே இவர் தான் கிங் ஆப் இந்தியன் சினிமா என்று சொல்லும் அளவிற்கு இடம் பிடித்த நடிகர் யார் என்றால் ஷாருக்கான்.
பாலிவுட் திரை உலகில் கிங் கானாக வலம் வரும் நடிகர் தான் ஷாருக்கான். அப்படிப்பட்ட இவர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்த பதான் படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியானது. இப்படம் கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்திருக்கிறது.
இந்த வெற்றியை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி அட்லீ இயக்கத்தில் 300 கோடி செலவில் உருவாகி வெளியான படம் தான் ஜவான். இப்படத்தில் முதல்முறையாக நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகி ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார். அப்படி இவர்கள் கூட்டணியில் வெளிவந்த படத்தை மக்கள் பெரிதும் கொண்டாடினார்கள். அதனாலயே 1148 கோடி வசூல் சாதனையை படைத்து இமாலய வெற்றி அடைந்திருக்கிறது.
அடுத்ததாக இந்த மாதம் 22 ஆம் தேதி ராஜ்குமார் கிராணி இயக்கத்தில் உருவான படம் டங்கி. இப்படத்தின் வசூல் 400 கோடி அளவை நெருங்கி இருக்கிறது. ஆக மொத்தத்தில் இந்த மூன்று படங்களின் மொத்த வசூலையும் சேர்த்து 2500 கோடி லாபத்தை பார்த்திருக்கிறார். மேலும் இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இந்த மூன்று படங்களுக்குமே தயாரிப்பாளராக இருந்தவர் ஷாருக்கானின் மனைவி கௌரிக்கான் பெயரில் இருக்கும் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான்.
அந்த வகையில் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பதற்கு ஏற்ப நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஷாருக்கான் இந்த ஆண்டு ஜெயித்து கிங் ஆப் இந்தியன் சினிமா என நிரூபித்துக் காட்டிவிட்டார். மேலும் ஜவான் மற்றும் பதான் படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியானது. டங்கி படம் மட்டும் தான் ஹிந்தியில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.