தமிழ் சினிமாவின் புரட்சி கலைஞர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த சினிமா நடிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருக்கும் ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் வரவில்லை. இந்த நிகழ்வில் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் போன்றவர்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாகர்கோவிலில் தலைவர் 170 படப்பிடிப்பிலிருந்து கிளம்பி நேரிடையாக தீவு திடலுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அதேபோன்று உலகநாயகன் கமலஹாசன் மற்றும் தளபதி விஜய் ஆகியோர்களும் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். இதில் கேப்டனின் இறுதி அஞ்சலிக்கு வராதவர் என்றால் நடிகர் அஜித்குமார் தான்.
நடிகர் அஜித்குமார் விடா முயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜானில் இருப்பதால் அவரால் வர முடியவில்லை. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் என்று விட்டுவிடலாம். ஆனால் அதன் பின்னால் நடந்த அரசியல் தான் தற்போது பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கிறது. அதாவது விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய உடனே அஜித் கேப்டன் விஜயகாந்த் குடும்பத்திற்கு தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தது.
நடிகர் அஜித்குமார் கேப்டனின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு போன் செய்து பேசியதாக சொல்லப்படுகிறது. நேற்று கேப்டனின் குடும்பம் இருந்த நிலையில் அஜித் போன் பண்ணி பேசி இருப்பாரா என்றால் கண்டிப்பாக இருக்காது. அப்படியே பேசி இருந்தாலும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அஜித் எங்களுக்கு போன் செய்து ஆறுதல் தெரிவித்தார் என்று அவருடைய குடும்பத்திலிருந்து யாருமே சொல்ல வாய்ப்பு இல்லை.
இன்று காலையிலிருந்து அஜித்குமார் பிரேமலதா விஜயகாந்திற்கு வாட்ஸப் மூலம் மெசேஜ் செய்து ஆறுதல் சொல்லியதாக சொல்கிறார்கள். உண்மையில் அஜித்துக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என இப்படி முட்டுக் கொடுக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் இவர்கள் இப்படி அதையும் இதையும் சொல்லி சமாளிக்க முயற்சிப்பது தான் அஜித்துக்கு கெட்ட பெயராக இருக்கிறது.
துபாயில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் ஆரம்பித்த போது அந்த பட குழுவில் இருப்பவர்களுக்கு அஜித் தன்னுடைய சொந்த செலவில் மருத்துவ முகாம் நடத்தியதாக ஒரு செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அதுவுமே முற்றிலும் உண்மை என சொல்லப்படுகிறது. அஜித்துக்கு நல்ல பெயர் வாங்கி தருகிறோம் என்ற பெயரில் இந்த கும்பல் செய்யும் விஷயம் அவருக்கு அவப்பெயரை தான் வாங்கிக் கொடுக்கிறது.