ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் பேருந்தொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பத்து வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.
பொதுமக்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிபிரயோகம் காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர்.
எல் கடெர் பகுதியில் பயங்கரவாதியொருவன் பொதுமக்கள் பேருந்து மீது தாக்குதலை மேற்கொண்டான் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.