14 வயது சிறுமியை விபச்சார தொழில் ஈடுபடுத்திய நபருக்கு நேர்ந்த கதி!

14 வயது சிறுமியை விபச்சார தொழில் ஈடுபடுத்திய நபருக்கு நேர்ந்த கதி!

14 வயது சிறுமியை விபச்சார தொழில் ஈடுபடுத்திய நபருக்கு நேர்ந்த கதி!14 வயது சிறுமியை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய 31 வயதுடைய நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) தீர்ப்பளித்துள்ளது.

மேலும், குற்றவாளிக்கு 45,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 450,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

குறித்த சிறுமியை சட்டவிரோதமாக காவலில் வைத்தது, விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தீர்ப்பை அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஒவ்வொருவரும் தங்கள் தாய், சகோதரி மற்றும் மனைவியை மதிப்பது போல் சமுதாயத்தில் அறிவு முதிர்ச்சி அடையாத இதுபோன்ற பிள்ளைகளை மதிக்க உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இதுபோன்ற பிள்ளைகளை சட்டவிரோதமாக நடத்தும் இதுபோன்ற நபர்களை நீதிமன்றம் ஒருபோதும் மன்னிக்காது என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கும் போது நீதிபதி கூறினார்.

தண்டனையை அறிவிப்பதற்கு முன் ஏதாவது கூற வேண்டுமா என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிபதி இதன்போது கேட்டிருந்தார்.

இதன்போது, பிரதிவாதிக்கு தண்டனை வழங்கி, தனக்கு நீதியை பெற்றுத்தருமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

இங்கு அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்தின் முன் உண்மைகளை முன்வைத்து, எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களைச் செய்ய எதிர்பார்க்கும் மக்களுக்குப் பாடமாக அமையும் வகையில் இந்தக் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரினார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களை செய்ய எதிர்பார்க்கும் நபர்களுக்கு பாடமாக அமையும் வகையில் இந்த குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து கோரினார்.

ஆனால், விசாரணையின் போது அத்தகைய சாட்சிகள் எதுவும் வெளிவரவில்லை என்று கூறிய நீதிபதி, பின்னர் இந்த தண்டனைகளை அறிவித்தார்.

இச்சம்பவத்தின் போது, ​​பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 14 வயது என்பதுடன், விகாரை ஒன்றின் வருடாந்த பெரஹெரவை காண சென்றிருந்த போது, குற்றம் சாட்டப்பட்டவர் அவருக்கு ஆசை வார்த்தைகளை கூறி மருதானை பகுதியில் உள்ள விடுதிக்கு அவரை அழைத்துச் சென்று, பலவந்தமாக தடுத்து வைத்து, பணத்திற்கு அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.