இதோ உங்களுக்கு நரகத்தை காட்டுகிறோம்- 430மைல் செல்லும் அதி நவீன தாக்குதல் ட்ரோன் !

இதோ உங்களுக்கு நரகத்தை காட்டுகிறோம்- 430மைல் செல்லும் அதி நவீன தாக்குதல் ட்ரோன் !

சுமார் 430 மைல் தொலைவு வரை சென்று, துல்லியமாக தாக்க வல்ல ஆளில்லா தற்கொலை விமானத்தை உக்ரைன் தயாரித்து. சோதனையில் வெற்றி கண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கொடுத்த ஏவுகணைகளை விட, இது இரட்டிப்பு மடங்கு அதிக தூரம் சென்று தாக்க வல்லது. மேலும் இந்த ஆளில்லா விமானத்தின் வேகம் மிகவும் அதிகமாக இருப்பதால், எதிரியின் தாக்குதலில் இருந்து இது தப்பி விடும் என்று, அதிபர் சிலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதற்கு HELL அதாவது நரகம் என்று பெயர் சூட்டி உள்ளார், உக்ரைன் அதிபர் சிலன்ஸ்கி. இதனை ரஷ்ய எல்லையில் இருந்து ஏவினால் ரஷ்யாவுக்கு உள்ளே ஊடுருவி 430 மைல் தொலைவு வரை சென்று தாக்க வல்லது.