குவைத் வங்கியை ஏமாற்றி, எப்படி பணத்தை அடித்துக் கொண்டு நாட்டை விட்டு ஓடுவது என்று கேட்டால் அதற்கு மலையாள நர்சுகள் இதில் PHD முடித்துள்ளார்கள். 2024ம் ஆண்டில் மட்டும் சுமார் 700 கோடி(இந்திய மதிப்பில்) பணம் ஏமாற்றப்பட்டுள்ளது. அதாவது குவைத்தில் சுகாதார சேவையில் வேலை பார்க்கும் மலையாள நர்சுகள்(தாதிகள்) சுமார் 1400 பேர் இதுபோல பணத்தைப் பெற்று பின்னர், கனடா , அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓடி விட்டார்கள்.
இது எப்படிச் சாத்தியம் ? பல ஆண்டுகளாக இந்த விடையம் நடந்து வருகிறது. பிரித்தானியா, பிரான்ஸ் என்று ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் கூட குவைத் சென்று இதனைச் செய்து விட்டு. காசை எடுத்துக் கொண்டு மீண்டும் சொந்த நாடு திரும்பி விடுகிறார்கள். அங்கே சென்று முதலில் பிசினஸ் அக்கவுன்ட் ஒன்றை திறந்து காசைப் போட்டு. பெரும் வணிகள் நடப்பது போலக் காட்டிக் கொள்கிறார்கள். பின்னர் 6 மாதங்கள் கழிந்த பின்னர், குவைத் வங்கியில் லோன் அப்பிளை செய்கிறார்கள். இந்திய காசில் 2 கோடி என்பது, இந்த வங்கி சர்வ சாதாரணமாக கொடுக்கும் பணம் ஆகும்.
3 கோடி ரூபாவைக் கூட குவைத் வங்கி சர்வ சாதாரணமாக லோன் Amount ஆக கொடுக்கிறது. இதனை எடுத்து விட்டு லோனை திரும்ப கட்டாமல் கம்பி நீட்டி விடுகிறார்கள். முன்னர் சிறிய எண்ணிக்கையில் நடந்த இந்த விடையம். நாள் ஆக நாள் ஆக… பெரிய லெவலில் நடந்துள்ளது. குறித்த 1400 தாதிகள் மேல், குவைத் வங்கி வழக்கு பதிவு செய்து. இந்த பிடியாணையை இந்திய அரசிடம் கையளித்துள்ளதாம். இதனால் என்ன நடக்கப் போகிறது என்பது தான் தெரியவில்லை !