பகவதி பட பாம் சீன் எல்லாத்தையும் போட்டு சொதப்பி வைச்சிருக்கும் புஷ்பா -2 என்ன கலவை இது ?

பகவதி பட பாம் சீன் எல்லாத்தையும் போட்டு சொதப்பி வைச்சிருக்கும் புஷ்பா -2 என்ன கலவை இது ?

இந்த ஆண்டு பிரம்மாண்டமாக வெளியான படங்களில் ரசிகர்களை பெரிதும் சோதிக்காமல் கரையேறிய படம் என்றால் அது கல்கி 2898 ஏடி படம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படமும் மகாபாரதத்தையும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் துணைக் கொண்டு கலக்கியது. பிரபாஸ் போர்ஷன் சற்றே சோதித்தாலும் கிளைமேக்ஸில் கம்பீரமாக நின்றது. ஆனால், அதன் பின்னர் வெளியான அனைத்து மெகா பட்ஜெட் படங்களும் புரமோஷனுக்கு செலவு செய்யும் நேரத்தையும் பணத்தையும் எடிட்டிங்கிற்கு செலவு செய்தாலே நல்ல படமாக மாறியிருக்குமே என்கிற எண்ணத்தை தான் தோற்றுவிக்கிறது.

அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் இடையே சண்டை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது எல்லாம் நிஜமாகத்தான் இருக்கும் என்பது படத்தை பார்த்தாலே தெரிகிறது. பல இடங்களில் இயக்குநர் சுகுமார் தான் வைப்பது தான் காட்சி என லாஜிக்கே இல்லாமல் புகுந்து விளையாடியிருப்பது அவர் சொல்வதை எல்லாம் செய்து அவுட்புட் திருப்திகரமாக இல்லையே என அல்லு அர்ஜுன் நினைத்து கோபப்பட அனைத்து காரணங்களும் கொட்டிக்கிடக்கின்றன.

புஷ்பா 2 படத்திற்கு எடிட்டராக இருந்த ஆண்டனி ரூபன் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு நவீன் நூலி உள்ளே வந்தது. தேவி ஸ்ரீ பிரசாத்திடம் இருந்து பின்னணி இசை பணியை மொத்தமாக தமன் மற்றும் சாம் சி.எஸ் மாற்றியமைத்தது சொன்ன நேரத்திற்கு படம் வெளியாக வேண்டும் என்கிற பிரஷர் என அனைத்துமே புஷ்பா 2வில் பூதக்கண்ணாடி வைத்து பார்க்காமலே தெரிகிறது தான் பெரிய பிரச்சனையாகவே உள்ளது.

புஷ்பா 2 படத்தில் ஏகப்பட்ட படங்களின் ரெஃபரன்ஸ் மற்றும் பாதிப்புகள் அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. இயக்குநர் சுகுமார் புஷ்பா படத்தை இயக்கிய விதத்தை பார்த்து ஒட்டுமொத்த தேசமே இப்படியொரு இயக்குநரா? ராஜமெளலிக்கே டஃப் கொடுக்கிறாரே என பாராட்டினர். ஆனால், புஷ்பா 2 படத்தை 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்க கொடுத்தும் அவரால் முழுமையான படத்தை கொடுக்க முடியவில்லை என்பது தான் வருத்தமான விஷயமாக மாறியுள்ளது. புஷ்பா 2 படத்தின் கிளைமேக்ஸில் பகவதி பட பாம் சீன் எல்லாம் வருவது எல்லாம் காலக்கொடுமை