நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். 20 ஆண்டுகளை கடந்து அவரது திரைப்பயணம் தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார் தமன்னா. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக ஜெயிலர் மற்றும் ஸ்ட்ரீ 2 படங்களில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார் தமன்னா. இந்தப் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்தின் வெற்றிக்கும் காரணங்களாக அமைந்திருந்தன.
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் அடுத்தடுத்து கவனிக்கத்தக்க படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் நடிப்பில் அரண்மனை 4 படம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்திருந்தது. இந்த படத்தை இயக்கி, தயாரித்து, நடித்த சுந்தர்சியுடன் இணைந்து தமன்னா இந்தப் படத்தில் நடித்திருந்தார். இதனிடையே கடந்த ஆண்டில் வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் காவாலா என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார் தமன்னா. இந்த பாடலுடன் இணைந்து படத்தில் கேமியோ கேரக்டரிலும் அவர் நடித்திருந்தார்.
இதனிடையே பாலிவுட்டிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வெளியான ஸ்ட்ரீ 2 படத்தில் ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார். இந்த பாடல் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தது. இதனிடையே, தமிழில் அடுத்த பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. இந்நிலையில் ஸ்ட்ரீ 2 பட பாடலின் பிரம்மாண்டமான வரவேற்பை தொடர்ந்து தமன்னாவிற்கு அதே போன்று ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள தமன்னா காவலா மற்றும் ஆஜ் கி ராத் பாடல்கள் மிக சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது குறித்து உற்சாகம் தெரிவித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்திற்காக அந்த பாடலில் நடித்ததாகவும் இதே போல ஸ்ட்ரீ 2 படத்தின் இயக்குநர் தன்னுடைய நண்பர் என்பதால் அந்த பாடலுக்கும் தான் ஆடியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து இதே போன்ற ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாட வாய்ப்புகள் கிடைத்து வருவது குறித்து அவர் தன்னுடைய கடுப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பாலிவுட் இயக்குநர்களையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.