தேசிய தலைவர் வீடு புணரமைக்கப் பட்டுள்ளது அனுரா கண்டுகொள்ளவே இல்லை தடங்கலும் இல்லை !

தேசிய தலைவர் வீடு புணரமைக்கப் பட்டுள்ளது அனுரா கண்டுகொள்ளவே இல்லை தடங்கலும் இல்லை !

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வளர்ந்த வீட்டை அப்பகுதி மக்கள் துப்பரவு செய்துள்ளார்கள், மேலும் மதில் மற்றும் முன் பகுதிக்கு வண்ணம் பூசப்பட்டுள்ளது. தலைவரது 70வது பிறந்த நாளை முன்னிட்டே இவ்வாறு அவரது வீடு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பொலிசாரோ இல்லை ராணுவத்தினரோ தடுக்கவில்லை. இதேவேளை JVP கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணிப் பிரிவினர் சிலர் முன் நின்று இந்தக் காரியதை நிறைவேற்றி உள்ளார்கள். சில இடங்களில் தலைவருக்கு கேக் வெட்டிக் கொண்டாப்பட்டுள்ளது.

சொல்லப் போனால் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர் நாளும் வட கிழக்கில் கொண்டாப்பட்டுள்ளது. இம்முறை பெரும் எடுப்பில் மக்கள் கலந்துகொண்டதோடு எந்த ஒரு அச்சமும் இன்றி அவர்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டித்துள்ளார்கள். அனுரா ஏற்கனவே குறிப்பிட்டது போல, இம்முறை மாவீரர் தினத்தை அவர் அனுமதித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கொடியை மட்டும் ஏற்ற வேண்டாம், ஏன் எனில் அதற்கு இலங்கையில் தடை உள்ளதாக JVP கட்சி பிரமுகர்கள் சிலர் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் விரைவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என்ற புலம் பெயர் தமிழர்களின் கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

வரும் ஜனவரி மாதம் 14 மற்றும் 15 திகதியில், சர்வதேச தமிழர்கள் குழு ஒன்று அனுராவை சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளது. இதனூடாக 13ம் திருத்தச் சட்டம் அமுலுக்கு வரும் எனவும், மேலும் புலம்பெயர் தமிழர்கள் வைக்கும் கோரிக்கைகள் சில நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு நல்லெண்ண சமாதான சந்திப்பாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.