பெர்லின், லண்டன், வாஷிங்டனில்.. உங்களின் அலறல் கேட்கும்.. இஸ்ரேலுக்கு ஈரான் அடித்த எச்சரிக்கை மணி

பெர்லின், லண்டன், வாஷிங்டனில்.. உங்களின் அலறல் கேட்கும்.. இஸ்ரேலுக்கு ஈரான் அடித்த எச்சரிக்கை மணி

டெஹ்ரான்: இஸ்ரேல் மீது 3ம் கட்ட தாக்குதல்களை நடத்த தயாராகி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உடன் மத்திய கிழக்கு நாடுகள் செய்த எந்த ஒப்பந்தத்தையும் இதில் மதிக்க மாட்டோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

பெர்லின், லண்டன் மற்றும் வாஷிங்டனில் உங்களின் அலறல் கேட்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் விரைவில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில்.. இதற்காக இஸ்ரேல் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் தனது எல்லையில் அயர்ன் டோர்ம்களை நகர்த்தி வருகிறது. அயர்ன் டோம் தடுக்கும் என்றாலும் 10 நொடிக்கு 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஒரே நேரத்தில் வந்தால் அதனால் எதிர்கொள்ள முடியாது.

முக்கியமாக அயர்ன் டோம் முழுமையாக ஏவுகணைகளை பயன்படுத்திய பின் அடுத்த லோடிங் நடக்க 10 நிமிடங்கள் வரை கூட ஆகும். இடைப்பட்ட நேரத்தில் ஏவுகணைகள் வந்தால்.. அதை இஸ்ரேல் தடுக்க முடியாது. இதனால் கூடுதல் அயர்ன் டோம்களை இஸ்ரேல் எல்லைக்கு நகர்த்தி வருகிறது. இது போன்ற நேரங்களில் இஸ்ரேலின் மற்ற ஏவுகணை தடுப்புகள், அமெரிக்கா அளித்துள்ள ஏவுகணை தடுப்புகள் உதவும். இதற்காக அமெரிக்காவின் எல்லை பாதுகாப்பு அமைப்புகளையும் இஸ்ரேல் எல்லையில் களமிறக்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஈரானை கடுமையாக தாக்கிவிட்டதாகவும்… அவர்களின் ஏவுகணைகளை நிர்மூலம் செய்துவிட்டதாகவும் இஸ்ரேல் கூறியது. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்.. ஈரானின் ரேடார் சிஸ்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஈரான் உள்ளே வரக்கூடிய போர் விமானங்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்கிறார்கள்.

அதோடு இல்லாமல்.. ஈரான் தங்களின் சொந்த போர் விமானங்களை ரேடார் மூலம் வழிகாட்ட முடியாத நிலை ஏற்படலாம் என்கிறார்கள். 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அழித்துவிட்டோம்.. ஈரானிடம் அதற்கு மேல் ஏவுகணைகள் இல்லை என்று இஸ்ரேல் கூறி வருகிறது. ஈரான் பிரம்மாஸ்திரம்: இப்படிப்பட்ட நிலையில்தான்.. எங்களிடம் 400 ஏவுகணைகள்தான் இருக்கிறது என்று சொல்கிறீர்களா? பார்க்கலாம்.. எங்களிடம் எத்தனை உள்ளது என்பதை பொறுத்திருந்து என்று ஈரான் நேரடியாக சவால் விட்டு உள்ளது.

சமீபத்தில்தான் ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.

குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல் வெளியிட்ட ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க அணு மற்றும் எண்ணெய் மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி உள்ளது.

முன்னதாக ஈரானில் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களை தாக்குவதை விட ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து இருந்தார். முழு அளவிலான போரைத் தடுக்கும் நோக்கில் மிகப்பெரிய பதிலடியை கொடுக்காமல்.. மிதமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று பிடன் நெதன்யாகுவிடம் தெரிவித்து இருந்தார். அதன்படியே தற்போது இஸ்ரேல் லேசான தாக்குதலை நடத்தி உள்ளது.

ஈரான் எச்சரிக்கை: இதையடுத்து இஸ்ரேலுக்கு எதிராக நவீன ராட்சச ஆயுதங்கள், பயங்கர கருவிகளை களமிறக்க போகிறோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தெரிவித்து உள்ளதாம். புதிய நவீன ஆயுதங்களை இடம்மாற்றி வருகிறோம். எங்களுடைய தாக்குதல் இந்த முறை பயங்கரமாக இருக்கும். நவீன ராட்சச கருவிகள் தாக்குதலுக்கு தேவையான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படும். இந்த முறை எங்களுடைய தாக்குதல் புதிய திட்டத்தோடு, புதிய அணுகுமுறையோடும் இருக்கும் என்று இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தெரிவித்து உள்ளதாம். இது தொடர்பாக ஈரான் அரசு சார்பாக இஸ்லாமிய நாடுகளுக்கு ராஜாங்க ரீதியாக மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளதாம்.

ஈரான் தாக்குதல்: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில்.. இஸ்ரேல் மீது ஈரான் இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்த உள்ளதாம். இத்தனை நாட்கள் ஈரான் அமைதியாக இருந்தது.. ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை வைத்து proxy war.. அதாவது நேரடியாக போர் நடத்தாமல் மறைமுகமாக இஸ்ரேலை தாக்கி வந்தது. இதற்கு இடையில்தான் கடந்த மாதம் தொடக்கத்தில்.. மிகப்பெரிய அளவில் இஸ்ரேலை நேரடியாக ஈரான் தாக்கியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்.. ஈரானின் ரேடார் சிஸ்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஈரான் உள்ளே வரக்கூடிய போர் விமானங்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்கிறார்கள்.