பிரித்தானியா கொடுத்த ஸ்டோம் ஷடோ ஏவுகணையை , ரஷ்யா மீது ஏவி உக்ரைன் கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளது. 17அடி நீளமான பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த ஏவுகணையை இது நாள் வரை பாவிக்க வேண்டாம் என்று பிரிட்டன் கூறி இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதனை ரஷ்யாவுக்குள் ஏவ பிரிட்டன் அனுமதி கொடுத்தது. சுமார் 360மைல் தூரம் வரை பறந்துசென்று தனது இலக்கை துல்லியமாக தாக்கி அழிப்பதோடு பெரும் அழிவையும் ஏற்படுத்த வல்லது இந்த ஸ்டோன் ஷடோ ஏவுகணை.
இதனை அடுத்து ரஷ்யா கடும் ஆதிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யா ஐரோப்பிய நாடுகளை தாக்க ஆரம்பித்தால் முதலாவதாக பிரிட்டனையே தாக்கும் என்ற நிலை தோன்றியுள்ளது. இது இவ்வாறு இருக்க, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுத உதவிகளை நேரடியாக செய்து வருகிறது. ஆனால் சீனா நடு நிலை வகிப்பது போல இருந்து வந்த நிலையில். தற்போது உக்ரைன் ராணுவத் தளபதி அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் கைப்பற்றிய சில ஆயுதங்கள், தாக்குதல் கருவிகள் மற்றும் சில வகையான ஆளில்லா விமானங்கள் என்பன சீனத் தயாரிப்பு என்பது ஆகும். இதனை சீனா நேரடியாக ரஷ்யாவுக்கு வழங்கியுள்ளது என்பது தெளிவாகியுள்ள நிலையில். இது பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. ஏற்கனவே 3ம் உலகப் போர் ஆரம்பித்து விட்டது. நாம் தான் அதனைக் கவனிக்கவில்லை என்று மேலும் சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.