பிரிட்டனை தாக்க போகும் ரஷ்யா? புதின் நேரடி வார்னிங்.. உச்சக்கட்ட பதற்றம்! வெடிக்கும் உலக போர்?

பிரிட்டனை தாக்க போகும் ரஷ்யா? புதின் நேரடி வார்னிங்.. உச்சக்கட்ட பதற்றம்! வெடிக்கும் உலக போர்?

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் மோதல் கடந்த சில வாரங்களில் மிக மோசமான நிலைமையை எட்டியுள்ளது. குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா தனது அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் பிரிட்டன் மீதும் கூட தாக்குதல் நடத்தப் போவதாக ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன

கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் வெடித்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரப் போவதாகத் தகவல் வெளியான நிலையில், இதனால் தனது நாட்டிற்கு ஆபத்து எனச் சொல்லி உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது.

அப்போது தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இடையில் கடந்த சில மாதங்கள் ரஷ்யா உக்ரைன் போரில் பெரியளவில் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களில் நிலைமை மிக மோசமாக மாறியிருக்கிறது. பதற்றம்: முதலில் தங்களின் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் அனுமதி அளித்தன. இதையடுத்து ரஷ்யா மீது உக்ரைன் இந்த ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ரஷ்யாவும் தனது அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. எச்சரிக்கை: இதற்கிடையே பிரிட்டனை நேரடியாக எச்சரிக்கும் வகையில் புதின் சில பகீர் கருத்துகளைக் கூறியிருக்கிறார்

. அதாவது உக்ரைன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் ரஷ்யாவுக்கு மிக அருகே இருக்கும் நிலையில், இந்த ஏவுகணையைப் பயன்படுத்தத் தேவையில்லை. ஆனாலும், தங்களால் எந்த எல்லைக்கும் போக முடியும் என்பதைக் காட்டவே ரஷ்யா இந்த ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து டிவி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின் நேரடியாக மேற்குலக நாடுகளை எச்சரித்தார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த ரஷ்யாவுக்கு உரிமை உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், அந்த நாடுகளில் உள்ள பொதுமக்கள் இப்போதே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிக் கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

நேரடி எச்சரிக்கை: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கடந்த நவம்பர் 21ம் தேதி அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகள் தங்கள் நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தன. இதற்குப் பதிலடியாகவே உக்ரைன் நாட்டில் இருந்த ஒரு ஆயுதக் கிடங்கின் மீது நாங்கள் இப்போது தாக்குதல் நடத்தியிருக்கிறோம்” என்று நேரடியாக எச்சரித்தார். உக்ரைன் ரஷ்யா மோதல் மோசமாகி வரும் நிலையில், திடீரென புதின் இப்படி நேரடியாகவே எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகப் போர்: தங்களின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அனுமதி அளித்து இருந்தன. இதில் எந்த நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினாலும் அது நிச்சயம் உலகப் போராகவே வெடிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.