மன்னார் விடத்தல் தீவில் உள்ள, இலங்கை ராணுவத்தினரில் சுமார் 500 பேரை, அந்த முகாமில் தங்குமாறும் வெளியே செல்ல அனுமதி இல்லை எனக் கூறி லாக் டவுன் செய்துள்ளார் கட்டளைத் தளபதி. இவர்கள் அனைவருக்கும் ஒரு வகையான வைரஸ் காச்சல் பரவியுள்ளது. மேலும் முகாமில் உள்ள 600 ராணுவத்தினரையும் தனிமைப்படுத்தி, அவர்களையும் லாக் டவுன் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னார் விடத்தல் தீவு முகாம் முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இது ஒருவகை பறவைக் காச்சல் அல்லது புது வைரஸாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. பன்றி இறைச்சி உட்கொண்ட பின்னரே இந்த வைரஸ் தாக்கம் முதன் முதலாக ஆரம்பித்தது என்று ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.