இந்த அறிவித்தல் உண்மையில் அனுராவின் அலுவலகத்தில் இருந்து தான் வெளியானதா ? என்று நாம் அறிய முற்பட்டவேளை. இது அனுராவின் தமிழ் இணைப்பாளரால் வெளியிடப்பட்டுள்ளது என நான் அறிகிறோம்.
இலங்கையில் மாவீரர் தினத்தை நடத்த, இனி எந்த ஒரு தடையும் இல்லை என்று இலங்கை அதிபர் அனுரா வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது முற்றாக தமிழில் வெளியாகியுள்ள நிலையில். போரில் இறந்தவர்களை தமிழர்கள் நினைவு கூர்வதை, இனி யாரும் தடுக்க மாட்டார்கள் என்றும். ஆர்பாட்டங்கள் இன்றி அமைதியாக இதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அனுரா முன் வைத்துள்ளார்.
இதற்கு அமைவாக பொலிசாரும் ராணுவத்தினரும் தற்போது கெடுபிடிகளை தளர்த்தி வருவதை காணக்கூடியதாக உள்ளதாக கிளிநொச்சி வாசிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த அறிவித்தல் உண்மையில் அனுராவின் அலுவலகத்தில் இருந்து தான் வெளியானதா ? என்று நாம் அறிய முற்பட்டவேளை. இது அனுராவின் தமிழ் இணைப்பாளரால் வெளியிடப்பட்டுள்ளது என நான் அறிகிறோம். மேலும் இதன் நம்பகத்தன்மை தொடர்பாக, நாம் மேலும் ஆராய்ந்து வருகிறோம்.
இந்த அறிக்கையை முற்று முழுதாக நாம் கீழே இணைத்துள்ளோம். அதிர்வின் வாசகர்கள் பார்கலாம். இது ஒரு புரிந்துணர்வைக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. அத்தோடு மே மாதம் நடக்கும் போர் வெற்றி விழாவை அனுரா ரத்துச் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார் என்ற செய்தியும் வருகிறது. இதனால் மே18 துக்க தினமாகவே இருக்கும்.