ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு… சூப்பர் ஸ்டாரை சந்தித்த மகிழ்ச்சியில் புகழ்!

ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு… சூப்பர் ஸ்டாரை சந்தித்த மகிழ்ச்சியில் புகழ்!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் பிரபல காமெடி நடிகரான
புகழ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடி நடிகராக பார்க்கப்பட்டார்.

அதை அடுத்து அது இது எது உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பெண் வேடுமிட்டு தனது திறமையை வெளிக்காட்டினார் அது மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை கொண்டு போய் சேர்த்தது. குறிப்பாக பெண் வேடத்தில் அவர் செய்யும் கலாட்டாக்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையே சிரிப்பொலியால் ஆழ்த்தியது.

மேலும் சிரிப்புடா எனும் நிகழ்ச்சியில் சிறுசிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். அவர் பெண் வீடு நடித்த போது அவரின் நளினமான உடல் அழகு மொழிகளும் நகைச்சுவை தரும் உணர்ச்சிகளும் பலரையும் கவர்ந்து ஈர்த்தது. இதனாலே அவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

மேலும் விஜய் டிவியில் தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அவர் தனது திறமையை வெளிப்படுத்தி சமையல் நகைச்சுவை கலாட்டா என அனைத்தும் கலந்த கலவையாக பெரும் புகழ்பெற்றார். இதனிடையே தனது நீண்ட நாள் காதலி ஆன பென்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரஜினியை சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு தலைவரை நேரில் பார்ப்பது. அப்படி எனக்கு கிடைத்த தருணத்தில், அவ்வளவு இயல்பாகவும், எளிமையாகவும் பேசி பழகினார். மக்கள் அவரை எவ்வளவு உச்சத்தில் வைத்தாலும் அதனை தன் தலையில் கூட ஏற்றிக் கொள்ளாத மனிதர். அதனாலேயே அவர் என்றும் சூப்பர் ஸ்டார் என கூறி பதிவிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி புகழ் , cinema news , kollywood news , latest cienma news