நாய் பூனைகளை சாப்பிடுகிறார்கள் இந்த அகதிகள் வேண்டாம்… ரம் பேச்சால் செல்வாக்கு சரிவு !

நாய் பூனைகளை சாப்பிடுகிறார்கள் இந்த அகதிகள் வேண்டாம்… ரம் பேச்சால் செல்வாக்கு சரிவு !

வாஷிங்டன் 11-09-2024

அமெரிக்காவில் பல மாநிலங்களில், நாய் பூனைகளை சாப்பிடும் இனம் வளர்ந்து வருவதாக ரம் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். இவர்கள் அகதிகளாக அமெரிக்காவுக்கு வந்து குடியேறிய மக்கள். அவர்களை விரட்ட வேண்டும். மீண்டும் அமெரிக்காவை ஒரு சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்று, TV நேரலை விவாதத்தில் ரம் தெரிவித்த கருத்து, மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம், கமலா ஹரிசுடன் முன் நாள் அதிபர் ரம், நேரடியாக விவாதத்தில் ஈடுபட்டார். அந்தவேளையே அவர் இது போன்ற கடும் இன வாத கருத்துக்களை நேரடியா வெளியிட்டார். தற்போது அமெரிக்காவே 2 டாக பிழவுபட்டு இருக்கிறது. அமெரிக்காவின் சில மாநிலத்தில் இன்றுவரை கடும், இன வாதம் நிலவி வருகிறது என்பது உண்மையான விடையம். அங்கே கறுப்பு இன மக்களை, பொலிசார் அடித்தே கொலை செய்து வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால். குறித்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள் டொனால் ரம்புக்கே வாக்குகளை போடுவார்கள்.

அங்கே டொனால் ரம்பின் வாக்கு வங்கி விகிதம் அதிகம். ஆனால் ஏனைய மாநிலங்களில் கமலா ஹரிஸ் முன் நிலை வகிக்கிறார். நேற்று நடைபெற்ற நேரடி விவாதத்தின் பின்னர், கமலா ஹரிசுக்கு, செல்வாக்கு 2% சத விகிதத்தால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் 2% சதவிகிதம் தானே என்று எண்ணவேண்டாம். அது மிகப்பெரிய வித்தியாசமாக கருத்ப்படுகிறது. முன்னர் ஜோ பைடன் ஜனாதிபதி வேட்ப்பாளராக ரம்பை எதிர்த்து போட்டியிட்டவேளை, 2 முதியவர்கள் போட்டியிடுகிறார்கள் என்று மக்கள் கருதினார்கள். ஆனால்…

ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகி, கமலா ஹரிசை முன் நிலைப் படுத்துவார் என்று ரம் சற்றும் எதிர்பார்கவில்லை. கமலா ஹரிஸ் தற்போது துணை ஜனாதிபதியாக இருந்து வருகிறார். இருப்பினும் அவர் ஒரு சட்ட மா அதிபர் என்பதனை எவரும் மறக்க முடியாது. மேலும் டொனால் ரம்போடு ஒப்பிடும் போது, கமலா ஹரிசின் வயது குறைவு, அவர் நாட்டை முன்னேற்ற பல திட்டங்களையும் கையி வைத்திருக்கிறார். இதனால் மக்கள், ஹரிசுக்கு தமது வாக்குகளை போடுவார்கள் என்று எதிர்பார்கலாம். வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி, நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், யார் வெல்வார்கள் ? என்பதனை திட்டவட்டமாக எவராலும் கூற முடியவில்லை என்று தான் கூறவேண்டும்.