பிரித்தானியாவின் மிக முக்கிய 10 நகரங்களில் AI-கமராக்கள், பாவனையில் விடப்பட்டுள்ளது. குறித்த கமராக்கள் அதி வேகமாகச் செல்லும் வாகனங்களை படம் எடுக்க அல்ல. மாறாக வாகனத்தினுள்ளே ஓட்டுனர் செய்யும் லீலைகளை படம் எடுக்க என இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மோபைல் தொலைபேசியை பாவிப்பது. வீடியோ பார்த்துக் கொண்டு வாகனத்தை ஓட்டுவது என்று, பிரித்தானியாவில் ஓட்டுனர்கள் பலவிதமான லீலைகள் செய்வது வழக்கம்.
இதனால் பல நூற்றுக் கணக்கான, விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு பல உயிர்ச் சேதங்களும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனைத் தடுக்கவே இந்த கமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வானத்தை ஓட்டும்போது, மோபைல் போனைப் பாவித்தால், £1,000 பவுண்டுகள் அபராதம், மற்றும் லைசன்ஸ்சில் இருந்து 6 புள்ளிகள் வெட்டப்படும் என்று, பொலிசார் அறிவித்துள்ளார்கள். எனவே ஓட்டுனர்களே ஜாக்கிரதை.
குறித்த இந்தக் கமராக்கள் மிகவும் துல்லியமாக வீடியோ எடுக்க வல்லவை. அதுமட்டும் அல்ல அவை எல்லா வாகனங்களையும் ஆராய்வதும் இல்லை. குறிப்பாக அவதானித்து ஒரு வாகனத்தை குறி வைத்து எடுக்கிறது. இதனால் மிகத் துல்லியமாக படம் எடுக்கிறது. இதனைப் பொலிசார் நீதிமன்றில் பாவிக்கிறார்கள். எனவே மக்களே ஜாக்கிரதை.