பிச்சு உதறீட்டாரு தளபதி GOAT- படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டம் – 2026 முதல்வர் விஜய் !

பிச்சு உதறீட்டாரு தளபதி GOAT- படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டம் – 2026 முதல்வர் விஜய் !

இன்று அதிகாலை தொடக்கம், தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் விஜய் நடித்த கோட் படம் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்களும் சரி அவரது ரசிகர்களும் சரி , படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்று கூறிவருகிறார்கள். கிளைமேக்ஸ் காட்சி நன்றாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ள அதேவேளை, படத்தில் பல பிரபலங்கள் உள்ளதும், கதையை வெங்கட் பிரபு நன்றாக கொண்டு சென்றுள்ளார் என்றும் கூறியுள்ளார்கள்.

இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று பல மாநிலங்களில் திரையரங்குகள் முட்டி வழிகிறது. அது போக பல மாநிலங்களில், பெரிய பட்ஜெட் படங்களை இந்த வாரம் வெளியிடவில்லை. காரணம் விஜயின் கோட் படம் வெளியாவதால் தவிர்த்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய்க்கு இருக்கும் வெறித்தனமான ரசிகர் கூட்டம், ஒன்றை மட்டும் மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள். 2026 தமிழக முதல்வர் விஜய் தான் என்று.