Counter Terrorism பிரிவு பொன்னம்பலத்திற்கு குளிசை கொடுத்ததா ? நாள் குறிக்கப்பட்டதாக தகவல்

Counter Terrorism பிரிவு பொன்னம்பலத்திற்கு குளிசை கொடுத்ததா ? நாள் குறிக்கப்பட்டதாக தகவல்

Source: Sri Lanka’s counter-terrorism agency engages in direct correspondence with Russian authorities.

இலங்கை MPயும் தமிழ் தேசியவாதியுமான பொன்னம்பலம் அவர்கள் தற்போது, மிகவும் சுகவீனமுற்று, படுக்கையில் உள்ளார். இத்தனை வாரங்களே அவர் தாக்குப் பிடிப்பார் என்று வைத்தியர்கள் கூறிவிட்டார்கள். இதேவேளை அவருக்கு வந்திருக்கும் புற்றுநோய் என்பது, புனர்வாழ்வு முகாம் சென்று பின்னர் திரும்பி வந்து இறந்த பல விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு வந்த அதே புற்று நோய் தான், என்பது ஒரு அதிர்ச்சியான விடையம். (இது ஒன்றும் இயற்கையாக நடந்த விடையம் அல்ல.)

இலங்கையில் இயங்கி வரும், பல படைப் பிரிவுகளில், Counter Terrorism Unit என்னும் பிரிவே மிகவும் மோசமான ஒன்றாக உள்ளது. நேரடியாக ரஷ்யாவுடன் தொடர்பில் இருக்கும் இந்தப் பிரிவு, அங்கிருந்து பல குளிசைகள்(மாத்திரைகளை) வரவளைத்துள்ளதாக சில ரகசிய தகவல் உள்ளது. செயற்கையாக மாரடைப்பை வர வளைப்பது, செயற்கையாக புற்றுநோயை வரவளைப்பது, மேலும் சொல்லப் போனால் செயற்கையாக பக்கவாதத்தை உண்டாக்குவது. இது போல சில ஆட் கொல்லி நோய்களை செயற்கையாக உருவாக்க இந்த மாத்திரைகளால் முடியும். அதிலும் புற்றுநோய் உருவாகி, அது அதிவேகமாக பரவும் வகையில் இந்த மாத்திரை வேலை செய்யும் என்கிறார்கள். இதுபோல பல மாத்திரைகள் உலகச் சந்தையில் கிடைக்கும். ஆனால் இதற்கு எல்லாம் முன்னோடி ரஷ்யா தான்.

சிங்கள ராணுவத்துடன் இணைந்து வேலை செய்த பல நபர்கள், இந்தப் பயம் காரணமாகவே நாட்டை விட்டே தப்பியோடியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. எங்களில் பலருக்குத் தெரியும், ரஷ்ய உளவாளி Alexander Litvinenko, பிரித்தானியாவில் சரணடைந்து பாதுகாப்பாக இருந்தவேளை. புட்டின் அனுப்பிய நபர் ஒருவர், அவருக்கு பொலோனியத்தை சிவப்பு வைனில் கலந்து கொடுத்தார். இதனால் அவர் சில வாரங்களில் புற்றுநோய் வந்து இறந்து போனார். ஆனால் அது போல கடுமையான கதிர் இயக்க பொருட்களைப் பாவிக்காமல், வீரியம் குறைந்த சில மாத்திரைகளை இலங்கை, Counter Terrorism பிரிவு பாவித்து வருகிறது என்பது , உறுதியாகியுள்ளது.

இன்று வரை, சட்டம் ஒழுங்கு என்று, எதுவுமே இல்லாத ஒரு நாடாக இலங்கை உள்ளது. எவர் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை ராணுவப் பிரிவு மட்டும், தனியாக இயங்கி வருகிறது. வியட்நாம் , பிலிப்பைன்ஸ் , கியூபா போல இங்கே ஒரு,  எழுதப்படாத அதிகாரம் ஒன்று ராணுவத்திற்கு இருக்கிறது.  2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை ராணுவத்தின் புனர்வாழ்வு முகாமிற்குச் சென்று திரும்பிய பல முக்கியமான போராளிகள்,2 அல்லது 3 வகையான உயிர்கொல்லி நோய்களுக்கு ஆளாகியே மரணம் அடைந்து வருகிறார்கள். அதனை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று இலங்கை அரசுக்கு பெரும் சவாலாக இருந்த பொன்னம்பலத்தையும் , இலங்கை அரசு மெளனமாக்கியுள்ளது.

சில வைத்தியர்கள் இது தொடர்பாக பேசவே பயப்பிடுகிறார்கள். தற்போது இந்த அளவுக்கு உளறித் திரியும் மருத்துவர் அர்சுணா இது பற்றிப் பேசுவாரா ? இல்லை அட அவர் தான் தற்போது தீவிர அரசியலில் இறங்கி,  ரணிலுக்கு ஆதரவாகப் பேசி வருகிறாரே… இப்படியே பேசிப் பேசி,…. பேசுபவர்களின் வீடியோவைப் பார்த்துப் ….பார்த்து…., தமிழ் இனம் குட்டிச்சுவரானது தான் மிச்சம் !