இந்த வருடம், கோடை காலம் ஆரம்பிக்கும் வேளை, உக்ரைன் மீது கடும் போர் ஒன்றைத் தொடுத்து பல நகரங்களை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டம். அத்தோடு எஸ்டோனியா, லட்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளை கைப்பற்றுவது. தனது 2 லட்சம் படைகளை மேற்கு உலக நாடுகள் நோக்கி நகர்த்துவதும், நட்ப்பு நாடான பெலரூசில் 50,000 ஆயிரம் ரஷ்ய படைகளை நிலை நிறுத்தி போலந்தை, அச்சுறுத்தி பின்னர் ஜேர்மனியை அச்சுறுத்த புட்டின் பல திட்டங்களை தீட்டியுள்ளார்.
இதனால் 3 லட்சம் படைகளை நேட்டோ நாடுகள் ரஷ்யா நோக்கி நகர்த்தும் நிலை வரும் என்று உளவுத் தகவல் தெரிவிக்கிறது. 2025ம் ஆண்டு மே மாதம் அளவில் 3ம் உலகப் போர் ஒன்று ஆரம்பிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும். இல்லையென்றால் ரஷ்யப் படைகள் பின்வாங்கிச் செல்லவேண்டும். ஆனால் புட்டின் பின்வாங்க மாட்டார். இதனால் 2025 மே மாதம் உலகப் போர் ஒன்று வெடிக்க கூடும் என்று உளவுத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதனால் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதற்கு தயார் படுத்தும் வகையில் சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க,
பிரித்தானியா தனது பாதுகாப்பை மேலும் பன் மடங்கால் அதிகரித்துள்ளதோடு ரஷ்யாவின் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த மேலும் அதி நவீன, ஏவுகணை எதிர்ப்பு தளங்களை தயார்படுத்தி வருகிறது என்ற செய்தியும் கூடவே கசிந்துள்ளது.