ரஷ்யா அனுப்பிய அனைத்து ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்திய உக்ரைன்.. என்ன நடக்கப் போகிறது ?

ரஷ்யா அனுப்பிய அனைத்து ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்திய உக்ரைன்.. என்ன நடக்கப் போகிறது ?

நேற்று(11) இரவு , உக்ரைன் தலைநகர் மீது தாக்குதல் நடத்த என பல ஆளில்லா விமானங்களை ரஷ்யா அனுப்பி இருந்தது. இந்த விமானங்கள் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ஆகும். இவை ஈரானில் தயாரிக்கப்பட்டவை. இவற்றை ரஷ்யா நேற்று இரவு ஏவி இருந்தது.

ஆனால் அவை தலைநகர் வர முன்னரே, உக்ரைன் வான் காப்பு பிரிவால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அனைத்து ஆளில்லா விமானங்களும் வானில் வெடித்து சிதறியது. இதனால் ரஷ்யா அதிர்ச்சியடைந்துள்ளது. தற்போது உக்ரைனிடம் ஒரு பலமான வான் கட்டமைப்பு உள்ளது. இதனை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் போர் விமானங்களை உக்ரைன் வான் பரப்பின் மீது அனுப்புவது என்பது ரஷ்யாவுக்கு பெரும் சோதனையாகவே அமையும். அதனையும் உக்ரைன் சுட்டு வீழ்த்தினால், பெரும் சேதம் ஏற்படும். இதன் காரணத்தால் தான் ஆளில்லா தற்கொலை விமானங்களை ரஷ்யா தற்போது அனுப்பி தாக்குதல் , நடத்த திட்டம் தீட்டி வருகிறது.