தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகரான யோகி பாபு பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிப்படுத்தி காட்டி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக தனக்கான இடத்தை பிடித்து விட்டார்.
இவர் காமெடி நடிகர் என்பதையும் தாண்டி காமெடிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோ கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் யோகி பாபுவின் தனித்துவமான நடிப்பு எல்லோரது கவனத்தையும் ஈர்த்ததோடு அவருக்கான தனி அடையாளத்தை அந்த திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்தது.
தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதன்படி வெளிவந்த திரைப்படம் தான் தர்ம பிரபு, மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்கள் இதில் மண்டேலா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று யோகி பாபுவுக்கு மீண்டும் மிகப்பெரிய அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்து விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் “சட்னி சாம்பார்” இந்த திரைப்படத்தில் மைனா நந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மைனா மந்தினி சூட்டிங் ஸ்பாட்டில் யோகி பாபுவுக்கு லிப்ஸ்டிக் போட்டுவிட்டு மேக்கப் செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது. இதற்கு வாணி போஜன் உள்ளிட்டோர் கமெண்ட் செய்ய இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
View this post on Instagram
யோகி பாபு, சட்னி சாம்பார், மைனா நந்தினி , yogi babu, Chutney sambar