சுமார் 100 இடங்களில் ஆர்பாட்டங்களை நடத்த, Dar-Right என்ற இனவாதக் குழு முடிவுசெய்துள்ள நிலையில். எல்லா இடங்களுக்கும் பொலிசாரை அனுப்ப முடியாத நிலை தோன்றியுள்ளது. இதேவேளை Blackpool, மற்றும் Bristol ஆகிய நகரங்களில் ஆயிரக் கணக்கில் வெள்ளை இன மக்கள் கலந்துகொண்டதால் பொலிசார் பெரும் பாடு பட்டுள்ளதாக சற்று முன்னர் தகவல் வெளியாகியுள்ளது.
சில இடங்களில் ஆர்பாட்டக்காரர்களோடு சாதாரண மக்களும் கலந்துகொண்டுள்ள விடையம் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. ஏன் எனில் நாழுக்கு நாள், இனவாத ஆர்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது வருத்தமான செய்தி. இதேவேளை இந்தக் கலவரக்காரர்களோடு ஜிப்ஸிகள்(Gypsy) சிலர் இணைந்து கடைகளை உடைத்து சூறையாடி வருகிறார்கள்.
பிளாக் பூல் நகரில் திரண்ட மக்களைப் பார்த்து, ஆசிய இனத்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள். அவர்களில் பலர் தமது கடைகளை மூடிவிட்டு, பொலிசாரின் உதவிகளை நாடி வருகிறார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இது போன்ற ஆர்பாட்டத்தில் ஈடுபட்டால் 3 வருட சிறைத் தண்டனை என்ற சட்டத்தை லேபர் கட்சி அமுலாக்க உள்ளது. ஆனால் அது நடைமுறைக்கு வருமுன்னரே பெரும் அழிவை பிரிட்டன் சந்திக்க நேரிடும். புகைப்படங்கள் இணைப்பு.