விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான சீரியல் தான் பாக்கியலட்சுமி. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான தொடராக டி ஆர் பின் உச்சத்தில் இருக்கும் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலமே இருக்கிறார்கள்.
இந்த சீரியல் சுசித்ரா செட்டி என்பவர் பாக்கியலட்சுமி ஆக நடிக்கிறார். சதீஷ்குமார் என்பவர் கோபிநாத் ஆக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ரேஷ்மா பசுபலேடி ராதிகா என்ற கேரக்டரில் நடிக்கிறார். விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கும் இந்த தொடரின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதாவது ராதிகா – கோபிக்கு இடையே கடுமையான சண்டை நடைபெறுகிறது. அப்போது “உன்னை திருமணம் செய்த பிறகுதான் என்னுடைய குடும்பமே என்னை விட்டுட்டு போயிட்டாங்க” என கோபி கோபத்துடன் கூறுகிறார்.
உடனே ராதிகா “அப்போ டைவர்ஸ் பண்ணிட்டு போயிட்டே இருங்க’ என முகத்தில் அடித்தால் போல் கூறுகிறார். உடனே ஸ்தம்பித்து போன கோபி தன்னுடைய குடும்பத்தை நினைத்து சோகமாக பாடல் பாடி புலம்பி அழுகிறார். இந்த புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.