கல்யாண் பொண்ணு ரெடி… கீர்த்தி சுரேஷின் மாப்பிள்ளை யார் தெரியுமா?

கல்யாண் பொண்ணு ரெடி… கீர்த்தி சுரேஷின் மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஒவ்வொரு படத்திலும் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் மெய்சிலிர்க்க வைப்பார்.

குறிப்பாக அவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நடிகையர் திலகம். இந்த படத்தில் நடிகை சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். அவ்வளவு கச்சிதமாக அந்த படத்திற்கு பக்காவாக பொருந்தும் வகையில் கீர்த்தி சுரேஷ் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படியான நேரத்தில் கீர்த்தி சுரேஷ் மணப்பெண் போன்று அலங்காரம் செய்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு Just how last few weeks flew by என கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த மணப்பெண் அலங்காரத்தில் இருக்கும் போட்டோ சூப்பரா இருக்கு அது சரி மாப்பிள்ளை யாரு எனக்கு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

keerthi suresh, keerthi suresh week days கீர்த்தி சுரேஷ், இன்ஸ்டா போஸ்ட் ,