தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகராக வலம் வந்த நெப்போலியன் 1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.இதையடுத்து அரசியலில் ஈடுபட்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த அவர், ஒருகட்டத்தில் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
இருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் போனது. மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்கா அழைத்து சென்ற நெப்போலியன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அங்கு ஐடி கம்பெனி ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார் நெப்போலியன்.
இதுதவிர பல ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயமும் செய்து வருகிறார். மகன் மீது அதீத பாசம் கொண்ட நெப்போலியன், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருநெல்வேலி அருகே மயோபதி என்கிற ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை கட்டி இருக்கிறார். அங்கு தன் மகனை போல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகன் தனுஷுக்கு நெப்போலியன் திருமணம் செய்ய உள்ளார். அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து ஜப்பானின் டோக்கியோவில் தான் திருமணம் நடைபெற இருக்கிறது. ஓலைச்சுவடி போல வடிவமைக்கப்பட்டு இருக்கும் திருமண அழைப்பிதழ் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ:
https://www.instagram.com/reel/C95Gyx5ukls/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==